பிரம்மாண்ட சாதனைகளை பதிவு செய்த 20 வயது அணித்தலைவர் ரஷித் கான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக பதவியேற்ற ரஷித் கான், வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

சட்டோகிராமில் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம், டெஸ்ட் விளையாடும் 10 நாடுகளுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை வங்கதேசம் பதிவு செய்துள்ளது.

20 வயதேயான ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக செயல்பட்டார். தனது தலைமையில் முதல் போட்டியையே வெற்றியுடன் தொடங்கிய அவர், சிறப்புமிக்க வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

  • டெஸ்டில் இளம் வயதில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனையை முன்பாகவே ரஷித் கான் படைத்தார்.
  • அறிமுக போட்டியிலேயே டெஸ்டில் வெற்றியைப் பெற்ற தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • அணித்தலைவராக அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் மற்றும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.
  • ஆட்டநாயகன் விருதை அணித்தலைவராக அறிமுகமான டெஸ்டிலேயே பெற்றுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்