ஐசிசியின் டாப் 10 தரவரிசை பட்டியல் வெளியீடு! முதலிடத்தில் இவர்கள் தான்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டி20 போட்டிக்கான டாப் 10 வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம் பிடித்துள்ளார்.

அடுத்ததாக அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

இந்திய அணி வீரரான ரோஹித் சர்மா 7ம் இடத்திலும், 8வது இடத்தில் லோகேஷ் ராகுலும் இடம்பெற்றுள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்