டோனியின் பேட்டை தொட்டு கும்பிட்ட ரெய்னா... பயிற்சியின் போது நடந்த சுவாரஸ்யா வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சியின் போது, டோனியின் பேட்டை சுரேஷ் ரெய்னா தொட்டு கும்பிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதத்தின் இறுதியில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தொடரை ஏப்ரல் 15-ஆம் திகதிக்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து முன்னரே எந்த ஒரு அறிவிப்பும் வராத காரணத்தினால், சென்னை அணி வீரர்கள், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக, டோனி மற்றும் ரெய்னா ஆகியோர் தினந்தோறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்படி பயிற்சியின் போது,டோனி பேட்டை ரெய்னா தொட்டு வணங்குவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த வீடியோவில், டோனி பேட்டை அவரது கால் திசையை நோக்கி வைக்கும்போது தெரியாமல் ரெய்னாவின் மீது பட்டதால் அவர் அந்த பேட்டை தொட்டு வணங்கினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக போட்டி தள்ளிவைக்கப்படுத்தால் இந்த பயிற்சி எத்தனை நாள் தொடரும் என்பது தெரியவில்லை, ஆனால் மைதானத்தின் உள்ளே ரசிகர்கள் நேற்று முதல் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்