டோனிக்கும் தனக்கும் என்ன பிரச்சினை? சுரேஷ் ரெய்னா விளக்கம்

Report Print Basu in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் அணித்தலைவர் டோனியுடன் பிரச்சினை என தகவல்கள் பரவிய நிலையில் இது குறித்து ரெய்னா விளக்கமளித்துள்ளார்.

இணையதளம் ஒன்றிற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இந்தியா திரும்பியது தனிப்பட்ட காரணம், எனது குடும்பத்திற்காக தான் நான் நாடு திரும்பினேன் என ரெய்னா கூறினார்.

மேலும், சிஎஸ்கே அணி மற்றும் டோனிக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை. சிஎஸ்கே அணி எனது குடும்பம் போல தான், டோனி எனக்கு மிகவும் முக்கியமான நபர்.

சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல் உணர்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை விளையாட விரும்புகிறேன்.

வலுவான காரணம் இல்லாமல் யாரும் ரூ. 12.5 கோடியை புறக்கணிக்கமாட்டார்கள். தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன், விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்