ஸ்டைனை தூக்கிட்டு இலங்கை வீரருக்கு வாய்ப்பு கொடுத்துள்ள கோஹ்லி! வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா?

Report Print Santhan in கிரிக்கெட்
2340Shares

மும்பை அணிக்கெதிரான போட்டியில், கோஹ்லியின் பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும், ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், ரோகித் தலைமையிலான மும்பை அணியி விளையாடுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி மோசமான தோல்வியை சந்தித்தால், இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அணியில் இரண்டு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன் படி முந்தைய போட்டியில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் மற்றும் பிலிப்பிக்கு பதிலாக, அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா மற்றும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசுரு உடனாக ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை வீரர் இசுரு உடனாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு இலங்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்