வாழ்வா? சாவா? என்ற நிலைமையில் இருந்தேன்! ராஜஸ்தானை கதறவிட்ட தமிழன் விஜய் சங்கர்

Report Print Santhan in கிரிக்கெட்
334Shares

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டி, எனக்கு வாழ்வா, சாவா என்பது போன்ற நிலையில் தான் இருந்தது என்று ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் விஜய்சங்கர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ஓட்டங்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, வேகமாகவே பெளவிலியன் திரும்பிவிட்டதால், ஹைதராபாத் அணியின் ஆட்டம் முடிந்துவிட்டது என்று நினைத்த போது, இரு தூண்களாக மணீஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடித் தந்தது.

47 பந்துகளில் 83 ஓட்டங்கள் (8சிக்ஸர், 4பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மணிஷ் பாண்டே ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

மணிஷ் பாண்டேவுக்கு சிறிது சளைத்தவர் இல்லை என்பதுபோல் விஜய் சிங்கர் 52 ஓட்டங்கள் எடுத்தார். குறிப்பாக ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரின் பந்து வீச்சை விஜய் சங்கர் சாதரணமாக ஆடினார்.

இது குறித்து விஜய் சங்கர் கூறுகையில், தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டி எனக்கு வாழ்வா? சாவா போட்டிபோலத் தான் இருந்தது. இந்தப் போட்டியை அப்படி நினைத்து தான் விளையாடினேன்.

இந்த சீசனில் இதுவரை நான் துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இந்த போட்டியில் அணியின் டாப் ஆர்டர் துவக்க வீரர்கள் துரதிருஷ்டமாக ஆட்டமிழந்ததாலோ, அல்லது எனக்கு கிடைத்த வாய்ப்பால் நான் 4-வது வீரராக களமிறக்கப்பட்டு சிறப்பாக விளையாடினேன்.

ஆர்ச்சர் பந்துகள் மிகவேகமாக துடுப்பாட்ட வீரர்களை நோக்கி வரும், அந்த நேரத்தில் அவரின் பந்துகளை அடித்து ஆடுவதும், அதிலிருந்துவிக்கெட்டை பாதுகாப்பதும் மிகவும் அவசியம், போட்டியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்று நானும், மணிஷ் பாண்டேவும் முடிவு செய்தோம், அதை முடித்து கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்