இந்திய அணியில் எடுக்காத விரக்தியில் கோஹ்லியை பார்த்து முறைத்தாரா சூர்யாகுமார் யாதவ்? கமராவில் சிகிகிய அந்த காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்
730Shares

பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் முறைப்பது போன்று இருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில், தனி ஒருவனாக நின்று அடித்து மும்பைக்கு வெற்றி தேடித் தந்தார், சூர்யகுமார் யாதவ். 43 பந்துகள் சந்தித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆட்டத்தின் 12.6-வது ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை, கோஹ்லி அற்புதமாக பீல்டிங் செய்து தடுத்து நிறுத்தியதுடன், சூர்யகுமார் யாதவ்வை ஒரு மாதிரி சீண்டுவது போன்று பார்த்தார், அதற்கு நான் சளைத்தவன் இல்லை என்பது போல் சூர்யகுமார் யாதவ் கோஹ்லியை முறைத்து பார்ப்பது போன்று இருந்தது.

அதன் பின் வேண்டும் என்றே கோஹ்லி, சூர்யகுமா யாதவ்வின் அருகில் வந்து பந்தை பார்க்க, சூர்யகுமார் யாதவ்வும், கோஹ்லியை சீண்டினார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை எல்லாம் பதிவிட்டு ரசிகர்கள், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்வை எடுக்காததற்கு, அவர் தன்னுடைய பேட் மூலம் பதில் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

ஏனெனில், நேற்று முன் தினம் தான் அவுஸ்திரேலியாவில் இந்தியா விளையாடவிருக்கும் மூன்று தொடருகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்