பெற்ற மகன்களை தினக்கூலிக்கு அனுப்பிய பிரபல இசையமைப்பாளர்! காரணம் இதுதான்

Report Print Printha in பொழுதுபோக்கு
396Shares
396Shares
lankasrimarket.com

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பாகுபலி இஞ்சி இடுப்பழகி, நான் ஈ, அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் போன்ற படங்களுக்கு இசை அமைத்ததுடன், தெலுங்கில் 80-க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார்.

இவருக்கு 2 மகன்கள் உள்ளனர், அவர்கள் இருவரும் பணத்தின் அருமையை உணர வேண்டும் என்பதற்காக, இருவரையும் ஐதராபாத்தில் உள்ள பேக்டரி ஒன்றில் தினக்கூலி வேலைக்கு சேர்த்து விட்டார்.

அங்கு அவர்களுக்கு ஒருநாளைக்கு 50 ரூபாய் மட்டுமே சம்பளம், அது காபி, ஸ்நாக்ஸ் சாப்பிட கூட போதுமானதாக இருக்காதாம்.

சமீபத்தில் அவரது மகன்களில் ஒருவரான ஸ்ரீசிம்ஹா, இயக்குனர் ஆக விரும்பினார்.

அதுபற்றி தனது தந்தையிடம் கூறிய போது, அதற்கு அவர் என் பெயரை யாரிடமும் பயன்படுத்தாமல் உன் திறமையை பயன்படுத்தி உதவி இயக்குனராக சேர்ந்துக் கொள் என்றாராம்.

பல படங்களை இயக்கிய சுகுமாரிடம் சென்ற ஸ்ரீசிம்ஹா, பல மாதங்கள் அவர் பின்னாலேயே அலைந்து அவர் மனதை கவர்ந்துள்ளார்.

அதன் பின்னர் தான் அவரை சுகுமார் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார்.

தற்போது இதுபற்றிய தகவல் வெளியானதில் இருந்து உழைப்பின் மதிப்பை தனது பிள்ளைகளுக்கு இசையமைப்பாளர் கீரவாணி உணர வைத்த முறை குறித்து அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்