சல்மான்கானைப் போலவே சிறைக்கு சென்ற டாப் 10 பாலிவுட் நட்சத்திரங்கள்

Report Print Athavan in பொழுதுபோக்கு

அரியவகை மானை வேட்டையாடியதற்காக 20 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார் நடிகர் சல்மான் கான்.

அவரைப் போலவே சிறைவாசம் அனுபவித்த டாப் 10 பாலிவுட் பிரபல்ங்களும் அவர்கள் சிறைக்கு செல்ல காரணாமக இருந்தவைகளின் தொகுப்பு இதோ:

நடிகர் சஞ்சய் தத் 1993 மும்பை குண்டுவெடிப்புகளில் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த குண்டு வெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சோனாலி குறிப்பிட்ட மதத்தினரை உணர்வை காயப்படுத்தும் விதமாக உடை அணிந்து பத்திரிக்கை அட்டை படம் வெளியிட்டதால் சோனாலிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

நடிகர் ஜான் ஆபிரகாம் 2006 ஆம் ஆண்டில் பைக் ஓட்டி இருவரை தாக்கிய வழக்கில் அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் தனது பேண்ட் பட்டனை போடாத காரணத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் அதிலிருந்து ஜாமீன் பெற்று உடனே வெளியில் வந்துவிட்டார்.

நடிகை மோனிகா பேடி பாஸ்போர்ட் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

சைஃப் அலி கான், மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் சிறு பிரச்சனையில் ஈடுபட்டதால் சில மணி நேரத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

போதை மருந்து வாங்கிய குற்றத்திற்காக காவல் துறையினரால் ஃபர்த்தீன் கான் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் சிறையில் இருந்தார், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

நடிகர் சுனில் வங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டார்.

மதுர் பண்டார்கர், ப்ரீத்தி ஜெயின் என்பவரை படுக்கையறை காட்சியில் நடிக்க வைத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்