எனக்கும் அந்த பிரச்சனை இருந்தது.. தனிமையில் அழுதிருக்கிறேன்: பிரபல நடிகை சந்தியா

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் மன அழுத்த பிரச்னை எனக்கும் இருந்தது என நடிகை சந்தியா தன்னுடைய அனுபவம் பற்றி கூறியுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு ஒரு சில பெண்கள் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் எனப்படும் மனஅழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுவதுண்டு.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஒரு சில பெண்கள் மட்டுமே அதிலிருந்து மீண்டு வெளியில் வருகின்றனர்.

இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளிவருவது என்பது குறித்து பிரபல நடிகையான சந்தியா தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள சந்தியா, குழந்தை பிறந்த பிறகு எனக்கும் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் மனஅழுத்த பிரச்சனை இருந்தது.

இதை பற்றி தெரிந்துகொள்வதற்காக மருத்துவரை அணுகினேன். அங்கு அவர் எனக்கு சிலர் அறிவுரைகளை வழங்கினார். தினமும் எப்பொழுதாவது அழுகை வரும், அப்படி வந்தால் மனம் தீர அழுது விடுங்கள். அதனை எதிர்கொண்டு குழந்தையை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள் என அவர் கூறினார்.

அதேபோல நான் தினமும் மாலை 5 முதல் 7 மணிவரை தனியாக அழுவேன். அதற்கான காரணம் என்ன என்பதே எனக்கு தெரியாது.

மிகுந்த வலியாக இருக்கும். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். சிறிது நாட்கள் கழித்து இந்த பிரச்னை சரியாகி விட்டது. அதன் பின்னர் எனக்கு தெரிந்த தாய்மார்கள் நிறைய பேருக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...