வெளிநாட்டில் பிரபல நடிகையுடன் ரகசியமாக ஊர் சுற்றும் கமல்ஹாசன்: வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு

அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் பிரபல நடிகை ஒருவருடன் வெளிநாட்டில் ரகசியமாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் குதித்துவிட்டார். சமீபத்தில் கூட தமிழகத்தில் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, அங்கு நேரடியாக சென்று தன்னுடைய ஆறுதலை கூறினார்.

அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் கமல் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஷுட்டிங் தற்போது சிங்கப்பூரில் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஸ்வரூபம், உத்தவில்லன் போன்ற படங்களில் நடித்த பூஜாகுமாரியுடன், கமல் சிங்கப்பூரில் ரகசியமாக ஊர் சுற்றி வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்திற்காக கமல் சிங்கப்பூர் சென்றுள்ளார். ஆனால் இந்த படத்தில் கமிட்டாகாத பூஜா குமாரி அங்கு சென்றது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே கௌதமியுடன் நீண்ட வருட உறவில் இருந்து வந்த கமல், அவருடன் இருந்து பிரிந்த போது கமலை பற்றி கௌதமி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்