மகளுக்கு ஆறுதல் கூறிய நடிகை ராதிகா: கண்கட்டப்பட்டவர்கள் ட்ரோல் செய்யட்டும்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

ராதிகாவின் மகள் ரயான் தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் சிலர் மோசமாக விமர்சித்து கிண்டல் செய்திருந்தனர்.

சரத்குமார் தனது இரண்டாவது பொண்டாட்டி ராதிகாவின் முதல் புருஷன் பொண்ணோட பையனுடன் உள்ளார், ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இணையவாசிகள் பலரும் ராதிகாவை மிகவும் மோசமாக கலாய்த்தனர். அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதற்கு ராதிகாவின் மகள் ரயான் தக்க பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை இணைத்திருந்தார்.

ஒரு தொழிலை அடிமட்டத்திலிருந்து கட்டமைத்து அதை வெற்றிகரமாக தொழிலாக மாற்றிய என் தாய் ஒரு சூப்பர்-வுமன். அதேபோல் எல்லா ஆணும் தகப்பன் ஆக முடியும். ஆனால் அடுத்தவர் குழந்தையையும் தன் குழந்தையைப் போலவே பாசம் காட்டி வளர்க்க உண்மையான ஆணால் மட்டுமே முடியும். அவர்தான் எனது தந்தை என்று தனது வலியை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் ராதிகா தனது மகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ராதிகா டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ரயான், சரத் நமது வலி யாருக்குமே தெரியாது. ஆனால் நமது அன்பும், வலிமையும் அனைவரும் பார்க்கக்கூடியதே. இருந்தாலும்கூட அதை உணர முடியாது. கண்கட்டப்பட்டவர்கள் ட்ரோல் செய்து கொண்டேதான் இருப்பார்கள்.

அவர்கள் அந்த சோகமான வாழ்வை வாழட்டும். நாம் நமது வாழ்வை வாழ்வோம் என ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers