பிரித்தானிய ஏகாதிபத்தியத்தையே தனி ஆளாக எதிர்த்து நின்ற மோடி! கிண்டலடித்த நடிகர் சித்தார்த்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

பிரதமர் நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் குறித்து நடிகர் சித்தார்த் கிண்டல் செய்துள்ளதுடன், சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

’PM Narendra Modi' எனும் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த ட்ரெய்லரை விமர்சனம் செய்யும் வகையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘பிரதமர் நரேந்திரமோடி ட்ரெய்லரைப் பார்க்கும்போது, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைத் தனி ஆளாக எதிர்த்து நின்று சுதந்திரம் வாங்கித் தந்த மோடி குறித்து ஏன் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது.

மதச்சார்பு கொண்ட நக்சல்களால் உருவாக்கப்பட்ட மோசமான உத்தியாக இருக்கிறது. #PMNarendraModi போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களை உருவாக்கும் திரைப்பட இயக்குநர்களின் நேர்மையைப் பார்க்கும்போது என்னுடைய மனது குழம்புகிறது.

இந்த ட்ரெய்லரைப் பார்க்கும்போது, ஜெயலலிதாவை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு படங்கள் எப்படி வரும் என்று தெரியவில்லை. உங்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பதை மன்னித்து விடலாம். ஆனால், வரலாற்றையே மாற்ற முயற்சிப்பதை மன்னிக்கவே முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers