கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராயின் உடை மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில், பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் கலந்துகொண்டார்.
தங்க நிற டிசைனர் கவுன் அணிந்திருந்த அவர், சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தார். ஆனால், அந்த உடையை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். குறித்த உடை பாம்பு மாதிரி உள்ளது என்றும், கையில் என்ன தவளை மோதிரமா என்றும் கேட்டு ஐஸ்வர்யா ராயை விமர்சித்துள்ளனர்.
மேலும் சில ரசிகர்கள், ஐஸ்வர்யா ராய்க்கு அழகு உள்ளதே தவிர, ஆடை குறித்த அறிவு இல்லை என்றும், சர்வதேச விழாவில் இப்படியா மோசமாக உடை அணிந்து வருவது என்றும் கேட்டுள்ளனர்.
இன்னும் சிலர், அவருக்கு உடை மட்டும் அல்லாமல் ஒப்பனையும் சரியில்லை, அதனால் மிகவும் வயதானவர் போன்று தெரிகிறார் என்றும், அவர் அணிந்த உடைகளிலேயே இதுதான் கேவலமான உடை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.