பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான விசு மரணம்..!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான விசு உடல்நலக்குறைவால் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கணும் போன்ற தேசிய விருது பெற்ற பல படங்களை இயக்கிய விசு(74) உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

நடிகர், இயக்குநர், கதையாசிரியர் உள்ளிட்ட பல்வேறு முகங்களை கொண்ட இவர், கடந்த சில தினங்களாகவே உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் சென்னையில் உயிரிழந்துள்ளார். அவரது இழப்பிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்