எஸ்பிபியின் சிகிச்சை தொடர்பில் தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள்: பொதுமக்களிடம் கெஞ்சிய எஸ்பிபி சரண்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் தற்போது பரவும் வதந்தியில் துளியும் உண்மை இல்லை என்றும், தயவு செய்து அவ்வாறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் எஸ்பிபியின் மகன் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடல் அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்பிபியின் மறைவு செய்தி வெளியானதும் அவரது ரசிகர்கள், உடன் பணியாற்றிய இசை கலைஞர்கள், பொதுமக்கள் என திரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் தகவலையும் வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், எஸ்பிபியின் இறுதிச்சடங்கு முடிவடைந்த நிலையில், சரண் தமக்கு கிடைத்துள்ள தகவல் குறித்தும், பொதுமக்களிடையே பரவும் வதந்தி தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்டு 5 முதல் அவர் இறக்கும் செப்டம்பர் 25 ஆம் திகதி வரை பாடகர் பாலசுப்ரமணியம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

தற்போது அந்த மருத்துவமனை வசூலித்த சிகிச்சை கட்டணம் தொடர்பிலும், அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாமல் அவதிக்குள்ளானதாகவும்,

இதனால் மாநில அரசாங்கத்திடம் உதவி கோரியதாகவும், தொடர்ந்து நாட்டின் துணை ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர் உதவ முன்வந்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதில் துளியளவும் உண்மை இல்லை எனவும், முற்றிலும் தவறான தகவல் எனவும் சரண் வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே துக்கத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்திற்கு இதுபோன்ற வதந்திகள் மேலும் வலியை தருவதாகவும்,

எஸ்பிபி இதுவரை யாரையும் புண்படுத்தியது இல்லை எனவும், அவரது ரசிகர்களும் அதே குணத்தை பின்பற்ற வேண்டும் எனவும் சரணம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்