சிறிய கிராமத்தில் பிறந்தவர் இன்று உலக பணக்காரர்களில் ஒருவர்! சாதனை தமிழரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
1810Shares
1810Shares
lankasrimarket.com

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக HCL விளங்குகிறது, இதன் நிறுவனர் பெயர் ஷிவ் நாடார் (72).

இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முலைபொழி என்னும் கிராமத்தில் கடந்த 1945ஆம் ஆண்டு பிறந்தார்.

தூத்துக்குடியில் பிறந்தாலும் தனது பள்ளிப்படிப்பை ஷிவ் நாடார் கும்பகோணத்தில் தொடங்கினார்.

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர் பள்ளிப்படிப்பை முடித்தவர், கோயமுத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

கல்லூரி படிப்புக்கு பின்னர் கடந்த 1968-ல் ஷிவ் நாடார் வேலை தேடி புது டெல்லிக்கு சென்றார். அங்குள்ள டி.சி.எம் (DCM) லிமிடெட் என்ற நிறுவனத்தில் பொறியாளர் வேலை கிடைத்தது.

ஒரு பக்கம் வேலையில் இருந்தாலும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது.

தொழில்நுட்பத் துறையில் ஷிவ் நாடாரின் மகத்தான பணியை பாராட்டி இந்திய அரசு கடந்த 2008-ல் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது

ஒரு வருட வேலை பார்த்த பிறகு ஐ.பி.எம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இணைந்தார்.

அங்கு நன்றாக வேலையை கற்றுக்கொண்ட ஷிவ் நாடார் 1970-ல் HCL நிறுவனத்தை சிறியளவில் தொடங்கினார்.

தொழில்நுட்பங்கள் குறித்த விடயங்களை தொடர்ந்து படித்து அதில் புலமை பெற்று வந்த நிலையில் 1982-ல் HCL நிறுவனத்தின் முதல் கணினியை ஷிவ் நாடார் வெளியிட்டார்.

தனது கடும் உழைப்பாலும், திறமையாலும் HCL நிறுவனத்தை நம்பர் 1 நிறுவனமாக கொண்டு வந்தார்.

இந்தியா மட்டுமின்றி HCL நிறுவனத்தின் படைப்புகள் இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன.

இந்தியா டுடே வெளியிட்ட 2017-ல் இந்தியாவில் வாழும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் ஷிவ் நாடாருக்கு 16வது இடம் கிடைத்துள்ளது

தற்போது HCL நிறுவனம் ஆண்டுக்கு 6.6 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டுகிறது. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2017-ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் 102-வது இடத்தில் உள்ளார்.

2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்