ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியல்: கிடு கிடுவென உயர்ந்த முகேஷ் அம்பானி!

Report Print Kabilan in தொழிலதிபர்

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி 13வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்டைப் பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனர் பெசோஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் 9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தப் பட்டியலில் 106 இந்தியப் பணக்காரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தியப் பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த பட்டியலில் 19வது இடத்தில் இருந்து கிடு கிடுவென 13வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு சுமார் 2.83 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, தற்போது 3.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 36வது இடத்திலும், HCL இணை நிறுவனர் சிவ் நாடார் 82வது இடத்திலும், லக்‌ஷி மிட்டல் 91வது இடத்திலும் உள்ளனர்.

ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் பிர்லா(122), அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானி (167) பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் (244) ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் சகோதரரும், ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1,349ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்