ஸ்ரீபிரசன்ன ஜெய ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெற்ற விளக்கு பூஜை

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
13Shares
13Shares
lankasrimarket.com

சிவகங்கை காளையார்கோவிலில் தெற்குதெருவில் தேரோடும் வீதியில் ஸ்ரீபிரசன்ன ஜெய ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது.

இவ் ஆலயத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

இதன்போது ஸ்ரீ பிரசன்ன ஜெய ஆஞ்சநேயர் ஆலயத்தில் காலையில் விஷ்வக்சேன பூஜை, ஜபாராயணம் ஹோமம், திருமஞ்சனம், ஆகியனவும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு 308 திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, தொடங்கி துர்கா, லெஷ்மி, சரஸ்வதி, அம்பிகைக்கு பூஜை செய்யப்பட்டு 108 நாமாவளி நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீபிரசன்ன ஜெய ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்