பாரதிகலா மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பாரதி விழாவும் - கவியரங்கமும் எனும் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு முன்னாள் இராஜங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் தலைமையில் நேற்று மாலை கொழும்பு விவேகானந்தா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடகொழும்பு தமிழ் பொதுநல மன்ற தலைவர் சி.தியாகராஜா வரவேற்புரையை நிகழ்த்தியிருந்தார்.
இதில் பிரபல வானொலியொன்றின் முன்னாள் அறிவிப்பாளர் சாமஸ்ரீ ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, கலாபூஷணம் ஆர்.வைத்தமாநிதி ஜே.பி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.