ஒரே ஒரு நிமிடம் இதை செய்தால் போதும்: முதுகு வலியை போக்கலாம்

Report Print Kabilan in உடற்பயிற்சி
807Shares
807Shares
ibctamil.com

இன்று கணினி யுகத்தில் திரையின் முன் அமர்ந்து பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் முதுகு வலி, கழுத்து வலியால் அவதிபடுகின்றனர்.

ஆனால், இதற்காக உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரே ஒரு நிமிடம் இந்த உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், நமது உடலில் உள்ள வலிகளை போக்குவதோடு, எதிர்காலத்தில் தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும்.

சமதள தரையில் தினமும் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் ஒரு நிமிடம் உடற்பயிற்சிகளை கட்டாயம் செய்து வந்தால் நல்ல பலனைக் காணலாம்.

முதுகெலும்பை வலுப்படுத்தும் பயிற்சிகள்

பயிற்சி 1
  • முதலில் தரையில் படுத்து இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது தலையை வலது பக்கமாகவும், இரண்டு கால்களையும் ஒரு சேர இடது பக்கமாக ஒரே நேரத்தில் திருப்ப வேண்டும். அதன் பின், அதற்கு எதிர் திசையில் திருப்ப வேண்டும்.

இவ்வாறு 4 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

பயிற்சி 3
  • தரையில் படுத்தவாறு இரண்டு கைகளையும் தலைக்கு பின்னே கொண்டு சென்று பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • அப்படியே, ஒரு காலின் மூட்டை மட்டும் மடக்கியும், மற்றொரு காலை நீட்டிம் தலையை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் திருப்ப வேண்டும்.
  • தலையை வலப்பக்கம் திருப்பும் போது, வலது கால் மூட்டினை மடக்கியும், இடப்பக்கம் திருப்பும் போது, இடது கால் மூட்டினை மடக்கியும் பயிற்சி செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, 10 முறைகள் நிறுத்தாமல் செய்ய வேண்டும்.

முதுகுக்கு வலுவூட்டும் பயிற்சி

இந்த முறை பயிற்சியை முட்டி போட்டவாறு மேற்கொள்ள வேண்டும். தரையில் முட்டி போட்டவாறு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், தலையை கீழ் நோக்கி குனிந்து, காலைப் பார்த்தவாறு வலைக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, சற்று மேல் நோக்கி தரைப் பார்த்தவாறும், அதன் பின் மேலே பார்த்தவாறும் கழுத்துடன் சேர்த்து தலையை வலைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியை 15 முதல் 30 வினாடிகள், 2 முறை செய்ய வேண்டும்.

இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியை வலுப்படுத்துதல்
  • தரையில் படுத்தவாறு, பாதங்களை ஊன்றி முட்டிகளை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர், இரண்டு கைகளை தலையின் பின் வைத்து பிடித்துக் கொண்டு, தலையை மேலே எழுப்பி, மீண்டும் தரையில் சாய்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ச்சியாக 10 முறை, மெதுவாக செய்ய வேண்டும்.

இரண்டாவது முறையில்,

  • தரையில் முதலில் படுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர், கைகளை தரையில் வைத்துக் கொண்டு, இரண்டு கால்களை மட்டும் மிதிவண்டி ஓட்டுவதைப் போல், ஒரு காலை பின்னோக்கியும் மற்றொரு காலை முன்னோக்கியும், காற்றில் நீட்டி மடக்க வேண்டும்.

இதனை 10 பத்து முறை செய்ய வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்