உயிருக்கே உலை வைக்கும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள்: ஆய்வில் வெளிவந்த தகவல்

Report Print Kavitha in உணவு

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நவர்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19 ஆயிரத்து 899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதிலும் ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர். அதிகம் பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்குக்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர்.

இதனை தொடர்ந்தும் பாரீஸ் பல்கலைக்கழகம் நடத்திய இரண்டாவது ஆய்வில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 159 பேர் ஐந்து ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் பதப்படுத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவோருக்கு இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.

அதுமட்டுமின்றி அதிகம் பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 277 பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள் வந்துள்ளதுள்ளது எனவும் அதைக் குறைவாக சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது.

மேலும் பாரீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர், குறைவாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அதிகம் பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், அடுத்து வரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் இதயம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்