மாரடைப்பு, மூச்சுத்திணறல் பிரச்சினையை குணமாக்க இந்தவொரு டீ மட்டும் குடித்தால் போதும்!

Report Print Kavitha in உணவு
0Shares

மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அளவற்ற மருத்துவ குணங்கள் பலவற்றைக் கொண்டது.

இலை, பட்டை, பழம், விதை என எல்லாமே பயன் தருபவை. இதன் பட்டையைக் கஷாயம் வச்சுக் குடிச்சா, எந்த நோயுமே பக்கத்துல வராது என்று சொல்லுவார்கள்.

அதிலும் மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினையை குணமாக்கும் மருத மர பட்டை டீ. தற்போது அது எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

 • மருதம் பட்டை பவுடர் - 4 கிராம்
 • டீ தூள் - சிறிதளவு
 • தண்ணீர் - 350 மி.லி.
 • வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
 • பசும் பால் - 40 மி.லி.

செய்முறை:

 • பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

 • 100 மி.லி. அளவுக்கு வற்றியதும் அதனுடன் வெல்லம், பால் சேர்த்து வடிகட்டி பருகவும்.

 • மருதம் பட்டை பவுடர் மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்.

பலன்கள்

 • மருதம் பட்டை மருத்துவ குணம் கொண்டது. நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தது.
 • மாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.
 • மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.
 • இந்த மருதம் பட்டை டீயை இரண்டரை மாதம் பருகலாம்.
 • பின்னர் சில காலம் இடைவெளி விட்டு தொடர்ச்சியாக பருகலாம். ஆண்டு முழுவதும் பருகக்கூடாது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்