உலகக்கிண்ணப் போட்டியில் சொன்னதை செய்து காட்டிய இங்கிலாந்து: 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி

Report Print Santhan in கால்பந்து
462Shares
462Shares
lankasrimarket.com

ஸ்வீடன் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ரஷ்யாவில் 21-வது பிபா உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 14-ஆம் திகதி துவங்கி, 28-ஆம் திகதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன.

அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3-ம் திகதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்த உலகக்கிண்ணப் போட்டியில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின.

தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன. உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன. நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என பிரேசிலை வென்றது.

இந்நிலையில் இன்றைய 3-வது காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் ஆர்வம் இல்லாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இப்படி போட்டி சென்று கொண்டிருந்த நிலையில், ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அஷ்லே யங் பந்தை உதைக்க மேகுய்ர் தலையால் முட்டி கோல் அடித்தார்.

அதன் பின் இரு அணிகளுமே முதல் பாதியில் கோல் அடிக்காததால், இங்கிலாந்து அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

அவர்களின் முயற்சிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் இங்கிலாந்து கோல்கீப்பர் அதை திறமையாக தடுத்தார்.

அதேவேளையில் இங்கிலாந்து வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் வலது கார்னர் பக்கத்தில் இருந்து அடித்த பந்தை லிங்கார்டு தலையால் முட்டி கோல் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார்.

அதை டேல் அலி தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத காரணத்தினால் இங்கிலாந்து அணி 2-0 என்று முன்னிலைப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பின்னர் தகுதி பெற்றுள்ளது.

மேலும் இப்போட்டிக்கு முன்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீடியோவை பார்த்த இங்கிலாந்து வீரர் ஹேரிகேன் நிச்சயமாக வரும் சனிக்கிழமை நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று உன் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.

தற்போது அவர் சொன்னபடியே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்