வடக்கு – கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் ரில்கோ கொங்கியூரெர்ஸ் அணி தனது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அண்மை யில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் ரில்கோ அணியை எதிர்த்து மாதோட்டம் அணி மோதியது.
முதற்பாதி ஆட்டத்தில் அணியின் முதலாவது கோலைப் பதிவுசெய்தார் தினேஸ்.
இரண்டாவது கோல் ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் இவனாஜனால் மற் றொரு கோல் பதிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து முதல் பாதியின் முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது ரில்கோ.
இரண்டாம் பாதியில் மாற்றங்கள் நிகழவில்லை. முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது ரில்கோ.