ஐரோப்பாவிற்குள் ஆப்பிரிக்க அகதிகள் முறைகேடாக நுழைவதை தடுக்க நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
224Shares
224Shares
ibctamil.com

பதின்மூன்று ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும், ஐரோப்பாவுக்குள் அகதிகள் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளில் வறுமையின் காரணமாக ஆப்பிரிக்கர்கள் சிறந்த வாழ்க்கையைத் தேடி ஐரோப்பாவுக்குள் நுழைவதன் மீதும் கவனம் செலுத்தவேண்டும் என்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற அந்த பேச்சு வார்த்தையில் முறையற்ற புலம்பெயர்தலின் பின்னணியில் உள்ள பிரச்சினைகள்மீது நடவடிக்கை எடுக்க அவை சம்மதித்துள்ளன.

புலம்பெயர்தலுக்கு பொருளாதாரப் பிரச்சினையும் ஒரு காரணமாக உள்ளது என்று நைஜீரிய உள்துறை அமைச்சர் Mohamed Bazoum தெரிவித்தார்.

பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அந்நாடுகள், கடத்தல்காரர்களைத் தண்டிப்பதற்கான தேசிய சட்டங்களை பலப்படுத்தவும், மனிதக் கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கு காவல் துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளன.

'அகதிகளை கடத்துபவர்களுக்கெதிரான போராட்டத்தை முறைப்படுத்துதல்” என்னும் தலைப்பிலான ஒருநாள் மாநாடு, ஐரோப்பாவில் சட்ட விரோத புலம்பெயர்தல் குறித்த அக்கறையைப் புதுப்பித்தலைப் பின்னணியாகக் கொண்டு நடத்தப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்குமுன் பல ஐரோப்பிய நாடுகளுக்குள் பெருங்கூட்டமாக அகதிகள் நுழைந்ததை அடுத்து ஐரோப்பியர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிற நாட்டு மக்கள் மீதான வெறுப்பு மற்றும் புலம் பெயர்தல் மீதான வெறுப்பை அடுத்து இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

Burkina Faso, Chad, Guinea, Ivory Coast, Libya, Mali, Mauritania, Niger மற்றும் Senegal ஆகிய நாடுகளின் அமைச்சர்களும் France, Germany, Italy மற்றும் Spain, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

சட்ட விரோதமாக அகதிகளைக் கடத்துவதிலிருந்து வரும் வருவாயை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சூழலை மேம்படுத்துவதற்கு இம்மாநாடு அழைப்பு விடுத்தது. இதற்கு அனைத்து நாடுகளின் ஒற்றுமையாக பாடுபட வேண்டியது அவசியம் என்றும் அது வலியுறுத்தியது.

இவ்விடயத்தின் முக்கியத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக பிரான்ஸ் தனது மூத்த அமைச்சர்களில் இருவரான வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian மற்றும் உள்துறை அமைச்சர் Gerard Collomb ஆகியோரை மாநாட்டிற்கு அனுப்பியது.

மேற்கு ஆப்பிரிக்காவில், சஹாராவுக்கு தெற்கில் அமைந்துள்ள நாடும், மாநாட்டில் பங்குபெற்ற நாடுகளில் ஒன்றுமான நைகர், ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காக ஆப்பிரிக்க அகதிகள் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பாதையாக மாறியுள்ளது.

அந்நாடு எடுத்துள்ள தொடர் முயற்சிகளின் விளைவாக அந்நாட்டின் வழியாக ஐரோப்பாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளின் எண்ணிக்கை, 2016இல் 330,000 ஆக இருந்தது, கடந்த ஆண்டில் 70,000 ஆகக் குறைந்தது.

பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் தேவையான ஆவணங்கள் இல்லாத வேற்று நாட்டவர்களை திருப்பி அனுப்புவதற்கு தேவையான ஆவணங்களை விரைந்து வழங்குவதற்கு சம்மதிக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்றம் விரைவில் கூடி புலம்பெயர்தல் தொடர்பான கடுமையான மசோதா ஒன்றை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்