பிரான்ஸ் அறிஞர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை: சீறும் துருக்கி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
214Shares
214Shares
lankasrimarket.com

குரானிலிருந்து சில வாசகங்களை நீக்கவேண்டும் என்று கோரி பிரான்ஸ் பிரபலங்கள் 300 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று வெளியிடப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்துள்ள துருக்கி அதிபர் எர்டகான் பிரான்ஸ் அறிஞர்களுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி Le Parisien செய்தித்தாளில் 300 பிரான்ஸ் பிரபலங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றில் ”யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் ஆகியோரைக் கொல்ல வேண்டும் என அழைப்பு விடுக்கும் வாசகங்களை குரானிலிருந்து நீக்க வேண்டும், அவை தற்காலத்திற்கு ஒவ்வாதவை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கையெழுத்திட்டவர்களில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy மற்றும் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் Manuel Valls ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த சம்பவத்தையடுத்து ”எங்கள் மத நூல்களைத் தாக்குவதற்கு நீங்கள் யார்? நீங்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று எங்களுக்குத் தெரியும்” என்று துருக்கி தலைநகர் அங்காராவில் உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டகான் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

உங்களுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர் பிரான்ஸ் நாட்டவர்களைத் தாக்கினார்.

நீங்கள் பைபிளையோ யூத மத நூல்களையோ படித்திருக்கிறீர்களா? அப்படி படித்திருந்தால் அவைகளையும் தடை செய்ய விரும்புவீர்கள் என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே பிரான்சுக்கும் துருக்கிக்கும் உறவுகள் சரியாக இல்லாத நிலையில் துருக்கிக்கும் குர்திஷ் போராளிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய பிரான்ஸ் முன்வந்ததையடுத்து நிலைமை இன்னும் மோசமானது.

இந்நிலையில் பிரான்சின் மத்தியஸ்த முயற்சியை தீவிரமாக மறுத்தது துருக்கி. இப்படிப்பட்ட சூழலில் இத்தகைய கடிதம் ஒன்று வெளியானதையடுத்து துருக்கி பிரதமர் Binali Yildirim, குரானின் ஒரு எழுத்தைக்கூட யாராலும் தொட முடியாது, அது கடவுளின் பாதுகாப்பின் கீழ் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்