பிரான்சில் கொண்டுவரப்பட உள்ள புதிய மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தில் இருந்து தானாக வருமான வரியை பிடித்தம் செய்துகொள்ளும் முறையை, அந்நாட்டு அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பணியாளர்களின் வருமான வரி செலுத்துதல் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

அதாவது, வருமான வரியை தனியாக செலுத்துவதற்கு பதிலாக, ஒவ்வொரு மாதமும் பணியாளரின் ஊதியத்தில் இருந்து அவருக்கான வருமான வரியானது, தானாகவே பிடித்தம் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் எட்வர்டு பிலிப் அறிவித்துள்ளார்.

முன்னதாக, பிரான்ஸ் பணியாளர்கள் வருடாந்திர ஊதியத்தில் இருந்தே வருமான வரியை செலுத்தி வந்தனர். இந்த புதிய முறையானது கடந்த 2015ஆம் ஆண்டிலேயே முன்னாள் ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்ட் என்பவரால் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அப்போது மேக்ரானுக்கு இந்த வரி முறையின் மீது சந்தேகம் இருந்ததால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த முறையின் மூலம் வருவாய் சேகரிப்பை மேம்படுத்த முடியும். மேலும் நுகர்வோரின் பொருளாதார விளைவுகள் மற்றும் வணிக ரீதியான மாற்றங்கள் மேம்படுவதையும் காணலாம் என்று கூறப்படுகிறது.

Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers