பிரான்சில் மார்ச் மாதம் வர இருக்கும் மாற்றங்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் மார்ச் மாதம் வர இருக்கும் மாற்றங்களைக் குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

புகையிலை விலையில் மாற்றம்

சிகரெட்டுகளை பொருத்த வரையில் விலையில் ஒரே ஒரு மாற்றம்தான், அது ஒருபோதும் குறையப்போவதில்லை.

ஆம், மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் சிகரெட் விலை உயரப்போகிறது.

ஒரு பாக்கெட்டுக்கு 50 செண்ட்கள் வரை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து, 2020க்குள் ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலையை 10 யூரோக்களாக ஆக்கும் அரசின் இலக்கு நெருங்கி வருவது போல் இருக்கிறது.

அடுத்த நவம்பர், மார்ச் 2020 மற்றும் நவம்பர் 2020இலும் மீண்டும் சிகரெட் விலை உயர்த்தப்பட உள்ளது.

தற்போது சிகரெட் பாக்கெட்களின் விலை 7.50 யூரோக்கள் முதல் 9.40 யூரோக்கள் வரையும், நாமே சுருட்டும் சிகரெட்களின் விலை சுமார் 10 யூரோக்களாகவும் உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வீடுகளை புதுப்பிப்பவர்களுக்கு எளிய முறையில் பண உதவி

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வீடுகளை புதுப்பிப்பவர்களுக்கான கடன் உதவி பெறுதல் திட்டத்தின் கீழ் அதிகம் பேர் பயன்பெறும் வகையில், அத்திட்டம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் நாளை முதல் அமுலுக்கு வருகிறது.

இத்திட்டம் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதோடு, இன்னும் எளிமையாக்கப்பட்டுள்ளது. கடன் பெறுவதற்கான தகுதி தர நிலையும் மாற்றப்பட்டுள்ளது.

இரண்டாண்டுகள் பழமையான அனைத்து வீடுகளும் தற்போது இந்த கடனுதவியைப் பெறலாம். இதற்கு முன்பு கூரை சரி செய்தல், சுவரில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்தல், ஜன்னல் மாற்றுதல், ஹீட்டர் மாற்றுதல், வீட்டை வெப்பப்படுத்த என்ன வகை ஆற்றலை பயன்படுத்துகிறோம், PECS என்னும் புகைப்பட பரிமாற்ற முறைக்கு என்ன வகை ஆற்றலை பயன்படுத்துகிறோம் என்னும் ஆறு விடயங்களில் ஏதேனும் இரண்டு பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே இந்த கடனுதவி பெறலாம் என்னும் நெறிமுறை இருந்தது.

ஆனால் தற்போது, ஏதேனும், ஒரு பிரச்சினை இருந்தால் கூட கடனுதவியைப் பெறலாம்.

மொப்பெட் மற்றும் குட்டிக் கார்களுக்கான உரிமங்களில் மாற்றம்

சாலையில் நடந்து போகிறவர்கள் இனி கொஞ்சம் பயமில்லாமல் நடந்து போகலாம். ஆம், இனி பிள்ளைகள் சாலையில் வண்டி ஓட்டும் முன் எட்டு மணி நேர தேர்வுகளில் வெற்றி பெற்றால்தான் வண்டி ஓட்ட முடியும்.

முன்பு BSR ஓட்டுநர் உரிமம் என அழைக்கப்பட்ட உரிமம் இனி AM உரிமம் என அழைக்கப்படும்.

அதற்காக கூடுதலாக ஒரு மணி நேர பயிற்சியுடன் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என இரண்டு அரை நாட்களாக, மொத்தம் எட்டு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.

அந்த பயிற்சியில், இளம் விண்ணப்பதாரர்களுக்கு சாலை அபாய விழிப்புணர்வு குறித்தும் அளிக்கப்படும் பயிற்சியின்போது, பெற்றோரில் ஒருவராவது உடன் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers