சீனாவுடன் விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரான்ஸ்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

சீன ஜனாதிபதி Xi Jinping பாரிஸிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானை அவர் சந்தித்தார்.

இரு நாட்டு தலைவர்களும் சில வியாபார ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். அவற்றில் முக்கியமாக விண்வெளி கூட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் படி, 2023-2024 ஆகிய ஆண்டுகளின் நிலவுக்கு அனுப்பப்படும் சீனாவின் Chang'e-6 விண்கலத்தில், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக பிரான்ஸும், சீனாவும் விண்வெளி கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் இணைந்துள்ளன. இந்த ஒப்பந்தத்துடன் புவி வெப்பமடைதல் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers