பிரான்சில் மகளுக்காக கொலைகாரனாக மாறிய தந்தை! பொலிசாரிடம் சொன்ன அதிரவைக்கும் காரணம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மகளை துன்புறுத்தி வந்த காதலனை பெண்ணின் தந்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Balagny-sur-Thérain பகுதியில் கடந்த திங்கள் கிழமை 60 வயது நபர் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

இதையடுத்து அந்த நபர் தானாகவே சென்று காவல்நிலையத்தில் சரணடைந்தார். அதன் பின் பொலிசாரிடம் தெரிவித்த தகவலில், 36 வயதுடைய தனது மகளினை, பிரிவுக்கு பின்னரும் தொடர்ச்சியாக குறித்த நபர் துன்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்து துப்பாக்கிச் சூடு நடத்தினேன்.

தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்திருந்தான் என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மீது இதற்கு முன்னர் எவ்வித குற்ற வழக்குகளும் இல்லை எனவும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அங்கிருக்கும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers