பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்களை தாக்கிய 17 வயது இளைஞன்! கைது செய்த பொலிசார்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் மீது தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரான்சின் Yvelines மாவட்டத்தின் Chanteloup-les-Vignes நகரில் கடந்த 22-ஆம் திகதி 18 வயது ஓரினச்சேர்க்கையாளர் இளைஞனை 17-வயது இளைன் ஒருவர் மிகவும் மோசமாக தாக்கியுள்ளான்.

இந்த தாக்குதலினால் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த நபர் 30 நாட்கள் மருத்துவ விடுப்பிலும், 30 நாட்கள் மனநல சிகிச்சைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிசார் தேடி வந்த நிலையில், அந்த இளைஞன் Conflans-Sainte-Honorine-ஐ சேர்ந்தவன் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அந்த நபரை நேற்று முன்தினம் கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers