பிரான்சையே கதிகலங்க வைத்த தீவிரவாதிகளின் தாக்குதல்... 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முக்கிய நபர்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 130 பேர் பலியான நிலையில், அந்த தாக்குதலுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் முக்கிய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 130 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த தாக்குதலில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமான குற்றவாளியாக சந்தேகத்தின் அடிப்படையில் போஸ்னியாவைச் சேர்ந்த 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பிரான்சில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் தொடர்புடைய நபராக சந்தேகத்தின் அடிப்படையில் போஸ்னியா நாட்டைச் சேர்ந்த ஆடிஸ் என்ற 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தீவிரவாத அமைப்பை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மீது சந்தேகம் வலுத்ததால், இந்த கைது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் இன்னும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நபர் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்