பிரான்சில் பொலிசார் நடத்திய விசாரணையால் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் பொலிசார் நடத்திய விசாரணைகளின்போது கருப்பிணிப்பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பாரிசின் 12வது வட்டாரத்தில் தம்பதிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக, கர்ப்பிணிப்பெண் ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட அப்பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், பொலிசார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். பொலிசார் தன்னை வன்முறையை பிரயோகித்து கைது செய்ததாகவும், அதன் காரணமாக தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக IGPN எனும் காவல்துறையினருக்கான சிறப்பு பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்