பிரான்சில் இந்த மாதம் சிகரெட் பெட்டியின் விலையில் அதிரடி மாற்றம்... எவ்வளவு விலை தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் வரும் நவம்பர் மாதம் முதல் திகதி சிகரெட் பெட்டி விலையில் மாற்றம் வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் விலைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டே சிகரெட் பெட்டியின் விலை வரும் 2020-ஆம் ஆண்டில் €10 களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின் சில மாத கால இடைவெளியில் விலை அதிகரிக்கப்பட்டு வந்திருந்தது.

இந்நிலையில், நேற்று நவம்பர் 1-ஆம் திகதி சிகரெட் பெட்டி ஒன்றின் விலை €0.50 என அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் படி Winston சிகரெட் பெட்டியின் விலை €8.50 இல் இருந்து €9 களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Marlboro Red சிகரெட் பெட்டி ஒன்றினது விலை €8.80 இல் இருந்து €9.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தயாரிப்பாளர்களான Camel filter சிகரெட் பெட்டியின் விலை €8.60 இல் இருந்து €9.10 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய தயாரிப்பாளர்களான Gauloises blondes நிறுவனத்தின் சிகரெட் பெட்டி ஒன்று €8.50 இல் இருந்து €9 களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றம் மார்ச் 1, 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து தற்போது வரை 9.32 வீதத்தால் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்