பிரான்சில் எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய்: எதிர்பாராமல் நடந்த சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் வேட்டைக்காக சென்ற போது எதிர்பார்தவிதமாக நாயால், துப்பாக்கியில் இருந்த குண்டு எஜமானரை தாக்கியதால், அவர் காயமடைந்தார்.

பிரான்சின் Pyrénées-Atlantiques மாவட்டத்தின் Mesplède நகரில் வசிக்கும் நபர் ஒருவர் கடந்த 18-ஆம் திகதி வேட்டைக்காக, தன்னுடைய நாயினை அழைத்துக் கொண்டு வேட்டைக்கு சென்றுள்ளார்.

அப்போது காட்டில் மரம் ஒன்றின் அருகே துப்பாக்கியை வைத்துவிட்டு, வேட்டைக்காக காத்திருந்துள்ளார். எதிர்பாரதவிதமாக அவர் நாயின் கழுத்தில் இருந்த பட்டியல் துப்பாக்கியின் கொழுவி விசை இழுக்கப்பட்டதால், துப்பாக்கியில் இருந்த குண்டு, வேட்டைக்காரரின் கைகளில் பாய்ந்தது.

இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் வயது 61 எனவும், இவர் ஓய்வு பெற்ற அதிகாரி என்று Orthez நகர பொலிசார் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் இதை ஒரு விபத்து என்று பதிவு செய்துள்ளனர்.

நாய் ஒன்று துப்பாக்கியை முழக்கியதில் நாயின் உரிமையாளர் காயமடைந்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers