30,000 பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் உடனடியாக வெளியேற உத்தரவு: பிரான்சில் கடும் குழப்பம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சிலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்களிலிருந்து சுமார் 30,000 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதையடுத்து பிரான்சில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவுவதை தவிர்ப்பதற்காக, பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவசர அவசரமாக பிரித்தானியர்களை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருடாந்திர விடுமுறைக்காக பல்லாயிரக்கணக்கான பனிச்சறுக்கு வீரர்கள் பிரான்ஸ் வந்து சேர்ந்து சில மணி நேரம் கூட ஆகாத நிலையில், நேற்று நள்ளிரவில் பிரெஞ்சு பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் திடீரென மூடப்பட்டன.

இதற்கிடையில், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டுள்ள பிரெஞ்சு பொலிசார், ஹொட்டல் ஹொட்டலாக சென்று, விவரம் தெரியாமல் சுற்றுலாவுக்கு வந்து சிக்கிக்கொண்டுள்ள பிரித்தானியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் ஆல்ப்ஸ் பகுதியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்