கொரோனா பிரச்சினையால் வருமானமே இல்லை... பிரான்சில் அவசர நிதியுதவி கோரும் பாலியல் தொழிலாளர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கொரோனா பிரச்சினையால் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவேண்டியுள்ளதால், தங்களுக்கு வருமானமே இல்லாமல் தவிப்பதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் பாலியல் தொழிலாளர்கள் தங்களுக்கு அவசர நிதியுதவி ஒன்றை வழங்குமாறு அரசைக் கோரியுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், அரசின் கட்டுப்பாடுகளின்படி வீடுகளுக்குள் அடைந்திருக்கவேண்டிய காலகட்டத்தில் எங்களுக்கு வருமானமே இல்லாததால், எங்களுக்கு ஒரு அவசர நிதியை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் வருவாய் இன்றித் தவிக்கும் தனியார் பணியாளர்களுக்காக பிரான்ஸ் சிறப்பு உதவியாக 1,500 யூரோக்களை அறிவித்துள்ளது.

ஆனால், அந்த பணியாளர்கள் பட்டியலில் பாலியல் தொழிலாளர்கள் இல்லை. ஆகவே, வேலையும் இன்றி, வருமானமும் இன்றி கடுமையான நிதிப்பற்றாக்குறையால் அவர்கள் தவிக்கிறார்கள்.

அத்துடன் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கான வாடகையையும் செலுத்த முடியாததால், அவர்களை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், உயிர் பிழைப்பதற்காக விதிகளை மீறி, அடைந்து கிடக்கும் அறைகளை விட்டு வெளியேற வேண்டிய ஒரு நிலை ஏற்படலாம் என அஞ்சுவதாக பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்