பிரான்சில் உயிரிழந்த 11 வயது மகளுடன் ஆற்றில் குதித்த தாய்! பொலிஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தாய் ஒருவர் தன்னுடைய 11 வயது மகளுடன் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

பிரான்ஸின் Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில் தாயை தீயணைப்புபடையினரை மீட்ட நிலையில், அவர் பொலிசாரிடம், வயிற்று வலி என கத்திய தனது மகளை அழைத்துக்கொண்டு காரில் மருத்துவமனைக்கு சென்றதாகவும், வழியில் விபத்தில் சிக்கிய கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததாகவும், தம்மை தீயணைப்பு படையினர் காப்பாற்றியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், சம்பவ நாள் அன்று, குறித்த தாயார் சில நிமிடங்களுக்குள்ளாக ஆற்றில் இருந்து மீட்கப்பட்டார். ஆனால் அவரின் மகளின் சடலம் மீட்கப்படவில்லை.

மூன்று நாட்கள் கடந்த நிலையில் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. ஆற்றில் பாய்வதற்கு முன்னரே அவரின் மகள் இறந்திருப்பது அவர்களுக்கு தெரியவந்ததால், பொலிசார் மீண்டும் அவரிடம் விசாரித்த போது, காரில் கொண்டு செல்லும் வழியிலேயே மகள் இறந்துவிட்டதாகவும், இதனால் விரக்தியில் தாமும் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என எண்ணி ஆற்றில் குதித்ததாகவும் கூறியுள்ளார்.

பொலிசார் வேறு எதுவும் காரணம் இருக்குமா என்று வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்