சீனா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க தயார்: பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சீனா விவகாரத்தில் இந்தியாவுக்கு நிலையான மற்றும் நட்பு ரீதியான ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

சீன ராணுவ வீரர்களுடனான மோதலின்போது இந்திய வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதற்காக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Florence Parly.

தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட Parly, இது நாட்டுக்கும், வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் துக்கமான ஒரு விடயம் என தெரிவித்துள்ளார்.

இத்தகைய கடினமான சூழலில், பிரான்ஸ் இராணுவத்துடன் கூட இணைந்து, இந்தியாவுக்கு எனது நிலையான மற்றும் நட்பு ரீதியிலான ஆதரவை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ள Parly, அனைத்து இந்திய ராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவர்களது எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பிராந்தியத்தில் இந்தியா பிரான்சின் கூட்டாளி என்பதை நினைவுகூர்ந்துள்ள Parly, ராஜ்னாத் சிங்கை தான் இந்தியா வந்து சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்