பிரான்ஸ் பிரதமர் உட்பட அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் பிரதமரும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

பிரான்ஸ் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளதையடுத்து பிரதமரும் அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் Edouard Philippe கூறும்போது, என்னை விட மற்றொருவர் பிரதமராக அதிக பயனுள்ளவராக இருப்பார் என ஜனாதிபதி கருதினால், அவரது தேர்வை முழு மனதுடன் மதித்து ஏற்றுக்கொள்வேன் என்றார்.

பிரான்சைப் பொருத்தவரை அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும்போது பிரதமர் ராஜினாமா செய்வது வழக்கம்தான் என்றாலும், சில நேரங்களில் முன்பு பிரதமராக இருந்தவரே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதும் சகஜமே.

ஆனால், இம்முறை அது நடக்குமா என்பது தெரியாது, காரணம், பிரதமர் Philippeக்கு, ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை விட மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது. அவர் 2022இல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதற்கிடையில், உள்ளூர் தேர்தல்களில் மக்கள் ஜனாதிபதியை கைவிட்டுவிட்டு கிரீன்ஸ் கட்சிக்கு ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டது மேக்ரான் கண்களை உறுத்துகிறது.

ஆக மொத்தத்தில், இன்னும் இரண்டாண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு பொருளாதாரத்தை மீட்டெடுப்பது முதல் பல்வேறு திட்டங்கள் வைத்துள்ள ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எப்படியாவது இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்