பிரான்சில் இன்னும் குறையாத கொரோனா! ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோர் பலி: தீவிர சிகிச்சையில் எத்தனை பேர் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனாவின் இரண்டாவது அலை இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நாட்டில் அந்தளவிற்கு நோய் பரவல் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரான்சில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 28,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 46,968-ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் மட்டும் 32,168 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 15000-க்கும் மேற்பட்டோர் முதியோர் இல்லங்களிலும், சமூகப் பராமரிப்பு மையங்களிலும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மொத்தம் 32811 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதித்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2435 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 4,759 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 361 பேர் புதிதாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் தற்போது 4039 கொரோனாத் தொற்று வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்