பெற்றோர் கண்முன்னே சிறுவனை துஷ்பிரயோகம் செய்த ராணுவ வீரர்: தாயும் உடந்தையாக இருந்த சோகம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
559Shares
559Shares
ibctamil.com

ஒன்பது வயது சிறுவனை அவனது பெற்றோர் கண்முன்னே அவர்களது சம்மதத்துடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜேர்மன் ராணுவ வீரருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Knut S என்னும் அந்த மனிதன் சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததோடு அவனது பெற்றோர் முன்னிலையிலேயே அந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதே வழக்கில் ஏற்கனவே ஒரு 40 வயது மனிதன் கைது செய்யப்பட்டு அவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டுபேரும் தனித்தனியே ஆளுக்கு 12,500 யூரோக்கள் வீதம் சிறுவனுக்கு இழப்பீடாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுவனின் பெற்றோர் அவனை ஆன்லைன் மூலம் பலரிடம் விபச்சாரத்திற்கு தள்ளியதும் தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி அந்த சிறுவனின் தாயும் அவளது ஆண் நண்பரும் கூட அவனை துஷ்பிரயோகம் செய்துள்ளனர், இதற்கான விசாரணை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் மர்ம நபர் ஒருவர் இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு துப்புக் கொடுத்ததையடுத்து இச்சம்பவம் வெளிவந்துள்ளது.

சிறுவன் பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்