ஜேர்மனில் காணாமல் போகும் அகதி சிறுவர்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டில் அகதி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் அதிகளவில் வந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிறுவர்களை ஜேர்மனிக்கும் அதேபோல் பிற நாடுகளுக்கும் கொண்டுவந்துள்ளது. அவர்களில் பலர் உடனடியாகவோ அல்லது பின்னர் சில நாட்களிலோ வரவுள்ள அதிகாரிகளுடைய ரேடாரில் இருந்து மறைந்துவிட்டனர்.

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஜேர்மனியின் Federal Criminal Investigation Office (BKA)அறிக்கையின்படி 8,400 அகதி சிறுவர்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்த எண்ணிக்கை 3,200 க்கு வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், அகதி சிறுவர்கள் காணாமல் போவதை அரசாங்கம் கணக்கில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers