பத்து பேருடன் இணைந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த அகதி! நீதிமன்றத்தின் முடிவு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய ஏற்பாடு செய்த சிரிய அகதி 22 வயதை எட்டியுள்ள நிலையிலும், அவனை சிறுவர் நீதிமன்றமே விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் Freiburgஇல் உள்ள இரவு விடுதி ஒன்றின் அருகில் 18 வயது இளம்பெண் ஒருவரை போதை மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளான் மஜித் என்னும் சிரிய அகதி ஒருவன்.

பின்னர் தனது நண்பர்கள் சுமார் 9 பேரை தொலைபேசி மூலம் அழைத்த அவன் அந்த இளம்பெண்ணை அவர்களுக்கு விருந்தாக்கியுள்ளான்.

அவளை மாறி மாறி சுமார் 11 பேர் வல்லுறவுக்குள்ளாக்கியிருக்கிறார்கள். மஜித்துடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பேர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

தலைமறைவான 11ஆவது நபரை பொலிசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். மஜித்மீது ஏற்கனவே 19 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக வழக்கு உள்ளது.

மஜித்துடன் கைது செய்யப்பட்ட இருவருக்கும் அந்த வழக்கிலும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டபோது மஜித் 21 வயதுக்கு குறைவானவனாக இருந்தான்.

ஆனால் தற்போது அவன் 22 வயதை எட்டியும், அவனை சிறார் நீதிமன்றமே விசாரிப்பது என முடிவு செய்யப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers