Brexitக்கு பின் எங்கள் நாட்டுக்கு வந்து விடுங்கள்: ஜேர்மனி அழைப்பது யாரை தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட்டுக்குப் பின் எங்கள் நாட்டுக்கு வந்து விடுங்கள், இங்கு நல்ல தட்ப வெப்பமும், உணவும் இருக்கிறது என ஒரு சாராருக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் நர்ஸ்களை குறிவைத்துதான் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Dusseldorfஇலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனை, பிரித்தானியாவில் வெளியாகும் இரண்டு செய்தித்தாள்களில், தற்போது பிரித்தானியாவில் அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் நர்ஸ்களை பிரெக்சிட்டுக்குப்பின் தங்கள் நாட்டுக்கு வந்துவிடுமாறு விளம்பரம் செய்துள்ளது.

ஜேர்மன் மற்றும் போலந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரம், அழகிய ஜேர்மனி படத்தைப் பின்னணியாகக் கொண்டு நர்ஸ்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

போலந்து நாட்டைச் சேர்ந்த நர்ஸ்கள் ஜேர்மனிக்கு வந்தால், அவர்களுக்கு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படும் என்றும், ஜேர்மனியில் சிறந்த தட்பவெப்பமும், உணவும் உள்ளதாகவும் அந்த விளம்பரம் தெரிவிக்கிறது.

அதேபோல் பிரித்தானியாவிலிருந்து போலந்துக்கு செல்லும் தூரத்தைவிட ஜேர்மனியிலிருந்து போலந்துக்கு செல்லும் தூரம் குறைவு என்றும் அந்த விளம்பரம் ஆசை காட்டியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers