சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய முதியவர்: சாக்லேட் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த அந்த பொருள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

எகிப்திலிருந்து ஜேர்மனி வந்த ஒரு முதியவர் பெர்லின் விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பு சோதனைக்குட்படாமலே செல்ல முற்பட, சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரை தடுத்து நிறுத்தினர்.

அவரிடம் சந்தேகப்படும் விதமாக எதுவும் இல்லை, ஒரு சாக்லேட் பெட்டியைத் தவிர.

அந்த பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்க, அவர் அதற்குள் சாக்லேட்டுகள் இருப்பதாக தெரிவித்தார் அவர்.

அந்த பெட்டியை வாங்கிய அதிகாரிகள், அதை அசைத்து பார்த்தபோது, ஒரு இனிப்பு அல்லது கேக் பெட்டிக்கான எடையில் அது இல்லை.

சந்தேகம் வலுக்க, அந்த பெட்டியை வாங்கி திறந்து பார்த்த அதிகாரிகள் அதற்குள் மூன்று மொராக்கன் ஆமைகள் இருப்பதைக் கண்டனர்.

மொராக்கன் ஆமைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால் அவற்றை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

உடனடியாக அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், அரசு விலங்குகள் நல மருத்துவர் ஒருவரிடம் அவற்றை ஒப்படைத்தனர்.

அந்த முதியவரை பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்