அகதிகள் தொடர்பில் ஜேர்மனி எடுத்துள்ள முடிவு: அதிகரிக்கும் விமர்சனங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

2020ஆம் ஆண்டிலிருந்து அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையை குறைக்க இருப்பதாக ஜேர்மனியின் நிதி அமைச்சர் அறிவித்துள்ளதையடுத்து விமர்சனங்கள் குவிகின்றன.

அரசுக்கு ஆகும் செலவை குறைக்கும் நடவடிக்கையாக, அகதிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 2020ஆம் ஆண்டிலிருந்து 1.3 பில்லியன் யூரோக்களாக குறைக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மனியின் நிதி அமைச்சர் Olaf Scholz அறிவித்துள்ளார்.

அகதிகளுக்கு தற்போதைக்கு வழங்கப்படும் உதவித்தொகை 4.7 பில்லியன் யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Scholzஇன் பட்ஜெட் திட்டம் அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

புகலிடக் கோரிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பதை ஒழுங்குபடுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறும் Scholz, இதனால் நிர்வாக செலவுகள் குறையும் என்கிறார்.

தற்போதைய நிலவரப்படி நாட்டுக்குள் வந்து வசிப்பிடம் ஒன்றை தேடிக்கொண்டு வாழ்வதற்கு உதவியாக ஒரு புகலிடக் கோரிக்கையாளருக்கு அவரது புகலிட நடவடிக்கைகள் முடியும் வரை மாதம் ஒன்றிற்கு 670 யூரோக்களை அரசு வழங்குகிறது.

இதற்கு பதிலாக புதிய திட்டத்தின்படி இனி ஒரு முறை மட்டும் மொத்தமாக 16,000 யூரோக்கள் வழங்கப்படும், இது ஒரு புகலிடக்கோரிக்கையாளர் ஜேர்மனிக்குள் வந்ததிலிருந்து முதல் ஐந்து ஆண்டுகளுக்கான செலவுக்கான தொகையாகும்.

இதற்கிடையில், தன் மீது கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள Scholz, தற்போது அமலில்லிருக்கும் திட்டம் 2018-லேயே முடிந்துவிட்டபோதும், அதை 2019 வரை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்