தண்ணீர் கொடுக்காமல் சிறுமியை சாக விட்ட ஜேர்மன் ஐ.எஸ் பெண் தீவிரவாதி: இன்று வழக்கு விசாரணை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியிலிருந்து ஓடி ஐ. எஸ் அமைப்பில் சேர்ந்த ஒரு ஜேர்மானிய பெண், ஒரு சிறுமியை தண்ணீர் கொடுக்காமல் தாகத்தால் துடித்து சாக விட்ட வழக்கு இன்று முனிச் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது இஸ்லாமிய மதத்தைத் தழுவிய ஜெனிபர் என்னும் ஜேர்மானிய மாணவி ஜேர்மனியிலிருந்து துருக்கி சிரியா வழியாக ஈராக் சென்று அங்கு ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தார்.

அங்கு ஆயுதம் ஏந்தி, பெண்கள் ஒழுங்காக உடையணிந்திருக்கிறார்களா என்பதை கவனிக்கும் பொறுப்பு ஜெனிபருக்கு கொடுக்கப்பட்டது.

பின்னர் துருக்கி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார் ஜெனிபர்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாத நிலையில், ஒரு நாள், மாறு வேடத்திலிருந்த FBI அதிகாரி ஒருவரிடம் பேசும்போது, பேச்சுவாக்கில் தான் ஒரு குழந்தையின் சாவுக்கு காரணமாகிவிட்டதாக உளறிக் கொட்டியிருக்கிறார் ஜெனிபர். அந்த கார் FBIக்கு சொந்தமானது.

அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக் உதவியுடன் பொலிசார் ஜெனிபரின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்.

யாஸிடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் அவரது மகளையும் அடிமைகளாக வாங்கியுள்ளனர் ஜெனிபரும் அவரது கணவரும்.

ஒரு நாள் அந்த சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்து விட, அவளை அடித்து சங்கிலியால் கட்டி பாலைவன வெயிலில் போட்டிருக்கிறார் ஜெனிபரின் கணவர்.

தண்ணீர், தண்ணீர் என கதறியவாறே தாகத்தில் உயிரிழந்திருக்கிறாள் அந்த சிறுமி. சிறுமிக்கு தண்ணீர் தராததோடு, கதறிய அந்த சிறுமியின் தாயை ஜெனிபரின் கணவர் அடித்து உதைக்க, அந்த பெண்ணின் தலையில் துப்பாக்கி ஒன்றை வைத்து மிரட்டியிருக்கிறார் ஜெனிபர்.

பின்னர் தனக்கும் ஒரு சிறு குழந்தை இருப்பதால், மனசாட்சி உறுத்த, ஜெனிபர் FBI அதிகாரியிடம் உளறிக் கொட்ட, அவர்களைப் பின் தொடர்ந்த காரில் இருந்த பொலிசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு இன்று தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் முனிச் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வழக்கின் முக்கிய அம்சமாக, ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மனைவியும் மனித உரிமைகள் வழக்கறிஞருமான அமல் க்ளூனியும், முன்னாள் ஐ.எஸ் பாலியல் அடிமையாக இருந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான நாடியா முராடும் இந்த வழக்கில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers