ஜேர்மனியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இளம்பெண்ணின் புகைப்படம்: அம்பலமான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் 3 வயது சகோதரனை படுகொலை செய்துவிட்டு மாயமான இளம்பெண்ணை பொலிசார் புகைப்படம் வெளியிட்டு, பொதுமக்கள் உதவியுடன் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் Detmold நகரில் நடுங்க வைக்கும் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமது 3 வயது ஒன்றுவிட்ட சகோதரரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிய 15 வயது இளம் பெண்ணை பொலிசார் புகைப்படம் வெளியிட்டும் ஹெலிகொப்டர் மூலமும் தீவிரமாக தேடியுள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் சிலரின் உதவியுடன், குறித்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உடற்கூராய்வில், குறித்த 3 வயது சிறுவனின் உடல் முழுவதும் மொத்தம் 28 வெட்டுக்காயங்கள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்ப சூழல், வெறுப்பு, அக்கறையின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Picture: Guido Kirchner

புதனன்று மாலை Detmold பகுதியில் உள்ள தங்களது குடியிருப்பில், சிறுவன் தூக்கத்தில் இருந்துள்ளான்.

தாயார் வெளியே சென்றிருந்த நிலையில், சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த 15 வயது இளம்பெண், தமது ஒன்றுவிட்ட சகோதரரை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதேவேளை குடியிருப்புக்கு திரும்பிய சிறுவனின் தாயார் குற்றுயிராக கிடந்த தமது மகனை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

Picture: Guido Kirchner

ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்துள்ளான். இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்த பொலிசார்,

மாயமான சகோதரியை வெள்ளியன்று பகல் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது சிறார்களுக்கான சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். விரிவான விசாரணைக்கு பின்னரே, இந்த கொலையின் உண்மையான பின்னணி தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Picture: Guido Kirchner

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்